Content Status
Type
Linked Node
TB Aarogya Sathi
Learning ObjectivesTb Aarogya Sathi Application
டிபி ஆரோக்ய சதி செயலியை:
காசநோய் (TB) “ஆரோக்ய சதி” செயலி:
காசநோய் (TB) ஆரோக்ய சதி (TB Aarogya Sathi), மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வை எற்ப்படுத்துவதோடு சுகாதார அமைப்புடன் நேரடி தொடர்பை அளிக்கிறது. இந்த இந்திய அரசின் மத்திய காசநோய் பிரிவின் சேவைகள் மக்களை சென்றடைவதற்கான முயற்சியை அதிகரிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது, மேலும் பொதுமக்களிடையே காசநோய் விழிப்புணர்வை அதிகரிப்பது, காசநோய் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச மற்றும் தரமான மருந்துகள், நோயறிதல் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த செயலி உதவியாக உள்ளது.
காசநோய் (TB) ஆரோக்ய சதி (TB Aarogya Sathi) செயலி மூலம் பொதுமக்கள் காசநோய் தொடர்பான கேள்விகள், காசநோயின் அறிகுறிகள், காசநோய் மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துக்கொள்ளலாம். இந்த செயலியைப் பயன்படுத்தி, எந்தவொரு பயனாளியும் காசநோய்க்கான சேவைகளை வழங்கக்கூடிய மிக அருகிலுள்ள சுகாதார வசதிகளைக் கண்டறிய முடியும்.
நி-க்ஷ்ய் (Nikshay)ல் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளை கண்காணித்தல், அவர்களின் சிகிச்சை முன்னேற்றம், (DBT) அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி (DBT) போன்ற விபரங்களை இச்செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.
- இச்செயலியைப் பயன்படுத்த உள்நுழைவு சான்றுகள் (Login) எதுவும் தேவையில்லை
- காசநோய் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
- காசநோயின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- காசநோயின் பக்க விளைவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்களை கண்டறியலாம் (Health Facility Search)
- உடல் எடை மற்றும் உயரம் மதிப்பீடு செய்யலாம்
- நி-க்ஷய் சம்பார்க் (NikshaySampark Helpline) - காச நோயைப் பற்றி ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அணுகுவதற்கான இலவச உதவி எண்ணை இச்செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
- விழிப்புணர்வு குறும்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- ஊட்டச்சத்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
- காசநோயாளிகளுக்கு இச்செயலி மூலம் கீழ்க்கண்ட வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன.
- நி-க்ஷ்ய் (Nikshay)இல் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் கூடுதல் தகவல்களை இச்செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
- சிகிச்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
- நோயாளிகள் இச்செயலி மூலம் தங்களது சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.
-
நோயாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து நிதி உதவியின் தற்போதைய (DBT) நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
“காசநோய் ஆரோக்ய சதி” (TB Aarogya Sathi) செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் QR குறியீட்டை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Figure: TB Aarogya Sathi Application snapshot
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments