Content Status
Type
Linked Node
DBT Schemes in NTEP
Learning ObjectivesDBT Schemes in NTEP
H5Content
Content
NTEP இல் DBT திட்டங்கள்
இத்தொகையானது பொது மற்றும் தனியார் துறை நோயாளிகள் அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
- பழங்குடியினர் உதவித்திட்டத்தின் கீழ், பழங்குடியினர் காசநோயால் பாதிக்கப்படும்போது அனைத்து வகை காசநோயாளிகளுக்கும் ரூ. 750/- ஒரு முறை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
- முதல்நிலை மருந்துகளுக்கு கட்டுப்படும் வகையிலான காசநோய்க்கு மருந்து எடுக்கும் (DSTB) நோயாளிகளுக்கு , சிகிச்சை ஆதரவாளராக செயல்பட்டவர்களுக்கு ரூ. 1000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுதப்படுகிறது.
- மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட (DSTB) காசநோயாளிகளுக்கு சிகிச்சை ஆதரவாளராக செயல்பட்டவர்களுக்கு ரூ. 5000/- இரண்டு தவணைகளில் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
காசநோயைக் கண்டறிந்து அரசுக்கு அறிவிக்கும் கீழ்கண்ட தனியார் அமைப்புகளுக்கு ரூ. 500/- அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
o தனியார் மருத்துவர்கள் * தனியார் கிளினிக்குகள்
o தனியார் மருத்துவமனைகள் * நர்சிங் ஹோம்கள்
o தனியார் ஆய்வகங்கள் * தனியார் மருந்தகங்கள்
- மேலும், மேற்கண்ட தனியார் அமைப்புகள் தாங்கள் கண்டறிந்து அரசுக்கு அறிவித்த காசநோயாளிகளின் சிகிச்சைக்கு இறுதி வரை உறுதுணையாக இருந்து , அவர்களை பூரணகுணமடைய செய்து அரசுக்கு தெரிவித்தாலோ அல்லது அவர்களை சிகிச்சையை முழுமையாக எடுக்க செய்து அரசுக்கு தெரிவித்தாலோ ரூ. 500/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
- தங்கள் வீட்டிற்கு அருகாமையில் காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சுகாதாரநிலையங்களுக்குத் தெரிவிக்கும் சாதாரண குடிமகன்களுக்கு ரூ. 500/- அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
- மேற்கண்ட பயனாளிகளின் வங்கி விவரங்களை சேகரிக்கும் காசநோய் சுகாதாரப் பணியாளர், அவ்விவரங்களை நி-க்ஷ்யில் உள்ளீடு செய்து அதனை சரிபார்க்க PFMS க்கு அனுப்பி வைக்கிறார்.
- இத்தகைய சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கு விவரங்கள் செல்லுபடியாகும் என்று PFMS ’வெற்றிகரமான சரிபார்ப்பு” என்று அறிவிக்கும்.
- அனைத்து வகையான காசநோயாளிகளுக்கும் (DSTB & DRTB) ஊட்டச்சத்து நிதியுதவி திட்ட “நி-க்ஷ்ய் போஷன் யோஜனா” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து அவர்கள் வழங்கிய அலைபேசி எண்ணிற்கு குறிஞ்செய்தி அவ்வப்போது அனுப்பப்படும்.
கட்டாய குறுஞ்செய்தி மற்றும் நிபந்தனை குறுஞ்செய்தி
- ஒவ்வொரு அறிவிக்கப்பட்ட காசநோயாளிகளின் அலைபேசி எண்ணிற்கு ஊட்டச்சத்து உதவித் தொகை வழங்குவது குறித்து நிபந்தனைக்குட்பட்ட நினைவூட்டல் இரண்டுமுறை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
- முதல் நிபந்தனை நினைவூட்டல் குறுஞ்செய்தி, நோய் கண்டறிந்து அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்பப்படும்.
- தவறான வங்கி விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தால், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை பரிவர்த்தனை நிராகரிக்கப்படலாம்.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments