Content Status
Type
Linked Node
Role of Health Volunteers in Community Engagement
Learning ObjectivesRole of Health Volunteers in Community Engagement
H5Content
Content
காசநோய் பணியில் “காசநோய் சாம்பியன்களின்” ஈடுபாடு அவர்கள் சமூக சுகாதார தன்னார்வலர்களாக பின்வரும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்
- சமூகத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவிடல் வேண்டும்
- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டங்களின் மூலம் காசநோயை பற்றியபல்வேறு நிலைகளை தெரிந்து கொள்ள பயிற்சிகளில் பங்கு கொள்ள வேண்டும்
- காசநோயாளிகளுக்கு ஆலோசகர்களாக அவர்களுக்கு நோய் தாக்கங்களை பற்றியும் அதை குணப்படுத்துதல் பற்றியும் எடுத்துக் கூற வேண்டும்
- காசநோய் சாம்பியன்கள் அவர்கள் செய்யும் பணிக்கு சர்வதேச காசநோய் “உலக காசநோய் தினம்” மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படும் போது உரிய அங்கீகாரம் வழங்கலாம்.
கிராம அளவில் சமூக கட்டமைப்புகளை ஈடுபடுத்துதல்: சமூக சுகாதார தன்னார்வலர்கள் சமூகத்தை பின்வருவனவற்றில் ஈடுபடுத்த வேண்டும்:
காசநோயாளிகளை கண்டறிதல்
காசநோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்
காசநோய் பற்றிய தயக்கம் மற்றும் பயங்களை குறைத்தல்
காசநோயாளிகளுக்கு ஆதரவாக இருத்தல்
- காசநோயாளிகளுக்கு உளவியல் ரீதியாக ஆதரவளித்தல்
- காசநோயாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பதட்டத்தை தணிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவலாம்.
- அவர்களுக்கு குடும்பம் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் பேச ஊக்கப்படுத்தவும்
- காசநோய் குணமானவர்களை சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் அவர்களுக்கு உதவியாக இருக்கவும் ஊக்கப்படுத்தலாம்
- அவர்களுக்கு ஆதரவான வழிகாட்டுதலை வழங்கவும், உதாரணமாக மனநல உதவி மையங்களை பார்க்கவும்; MoHFW இணையதளத்தில் கிடைக்கும் வீடியோ ஆதாரங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரலாம்.
- காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி குறிப்பிடும் போதும், பேசும் போதும் மிகவும் கவனமாகவும் மற்றும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேச வேண்டும்
- சமூகங்களில் காசநோய் பற்றிய களங்கத்தையும் தயக்கத்தையும் அதை தடுக்கும் விதத்தைப் பற்றியும் பகிர வேண்டும்
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments